உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எண் 116ல் ஒரு ரகசியம்!

எண் 116ல் ஒரு ரகசியம்!

பெரியவர்கள் இளையவர்களை வாழ்த்தும்போது நுõறாண்டு வாழ்க! என்பார்கள். இதைக் கேட்கும்  சிலருக்கு நுõறாண்டு மட்டும் தான் வாழ வேண்டுமா? இன்னும் கூடுதல் காலம் வாழக்கூடாதா? என்ற எண்ணம் எழும். இதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள். நுõறாண்டுகள் வாழ்வதை வேதம், சதமானம் பவதி என்று சொல்கிறது. சதம் என்றால் நுõறு. பொதுவாக 120 வயது வரை மனித வாழ்வு இருக்க வேண்டும் என்பது நியதி. ஜாதகம் எழுதும் போது 120 ஆண்டுகளுக்கு தசாபுத்தி குறிப்பது வழக்கம். இந்த 120 ஆண்டுகளில், முதல் நான்கு ஆண்டுகள் குழந்தைப் பருவம். இதில் என்ன செய்தோம் என ஞாபகத்தில் இருக்காது. ஐந்து வயதில் இருந்து 120வயது வரை 116 ஆண்டுகள் வாழ்வியல் தர்மத்தைக் கடைபிடித்து வாழ வேண்டும். இதனால் தான் ஆந்திராவில் புரோகிதர்களுக்கு தட்சணை கொடுக்கும் போது 116, 1116, 2116, 10116 என பணம் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த யுகத்தில் 120 ஆண்டு வரை வாழ்ந்தவர் ராமானுஜர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !