ஆறுமுக அர்ச்சனை என்றால் என்ன?
ADDED :3897 days ago
திருச்செந்தூரில் உள்ள ஆறுமுக பெருமானின் ஆறுமுகங்களுக்கும் ஆறுமுக அர்ச்சனை நடைபெறும். ஆறு வாத்தியார்கள் முருகனின் 6 முகத்தின் முன் நின்று திருநாமங்களை பாட, சிவாச்சாரியார்கள் 6 பேர் அமர்ந்து மலர் தூவி அர்ச்சனை செய்வது தான் ஆறுமுக அர்ச்சனை என்று அழைக்கப் படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களும் ஆறு வகையான உணவு படைக்கப்படும். ஆறு கற்பூரத் தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப் படும். முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களை செய்வதாக ஐதீகம். உலகிற்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளை காப்பது ஒரு முகம், வேத ஆத்மப் பொருளை விளக்குவது ஒரு முகம், பகைவனையும் தீயோனையும், அழிப்பது ஒரு முகம், தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஒரு முகம்.