குன்றத்தில் பாரி வேட்டை
ADDED :3498 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாதன் கோயிலில் பாரி வேட்டை திருவிழா நடந்தது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மகா சிவராத்திரியன்று குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருளினார். அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பாரி வேட்டையை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவு குருநாதன் கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன், ராக்காயி அம்மன், பெரிய கருப்பண சுவாமி, சங்கிலி கருப்பண சுவாமி, அக்னி வீரபத்திர சுவாமி, இருளப்பா சுவாமிகள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் நடந்தன. இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பூச்சப்பரத்தில் அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி, காட்டு பேச்சியம்மன் இருப்பிடம் சென்று பாரி வேட்டை நிகழ்ச்சி நடந்தது.