திருச்செங்கோடு கிரிவலப்பாதையில் குப்பை: அகற்ற பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED :3561 days ago
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கிரிவலப்பாதையில், மாதந்தோறும் பவுர்ணமி நாளன்று பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இப்பாதையில் செல்பவர்களுக்கு, பாக்கெட் குடிநீர் மற்றும் பிரசாதங்களை வேண்டுதல் செய்த பக்தர்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதனால், பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் குப்பை காகிதங்கள், சாலையோரங்களில் கிடக்கின்றன. பலமாக காற்று வீசும்போதும், வாகனங்கள் செல்லும்போதும் அவை பறந்து சென்று சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகின்றன. மலைசுத்தி சாலை குடியிருப்பு பகுதிகளில், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.