உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்

திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, சின்னதக்கேப்பள்ளியில் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த, 10ம் தேதி கங்கா பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, ஹோமம் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை யாகவேள்வி ஆரம்பிக்கப்பட்டு, அம்பாள் மூலமந்திர ஹோமம், நாடிசந்தனம், யாத்ரா தானம், பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து கலச புறப்பாடு, கோபூஜை, கலச கும்பாபிஷேகம் மூலவருக்கு கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, தசதானம், தசதரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !