அரியாங்குப்பம் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :5159 days ago
புதுச்சேரி : அரியாங்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் உள்ள பார்த்தசாரதி சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், ஆராதனை நடந்தது. திவ்யபிரபந்தங்கள், பாராயணம் மற்றும் கண்ணன் குறித்த உபன்யாசங்கள் நடந்தன. சிறுவர்கள் கண்ணன் ராதை வேடமணிந்து கலந்து கொண்டனர்.ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நம்மாழ்வார் சபையினர் செய்திருந்தனர்.