கோமாதாவான பசுவை வழிபட விதிமுறைகள் என்ன?
பசுவையும், கன்றையும் குளிப்பாட்டி மஞ்சள் மற்றும் குங்குமத்தினால் நெற்றி, கொம்புகள், முதுகு, வயிற்றின் இருபுறம் மற்றும் பின்புறம், வால் முதலிய இடங்களில் திலகம் வைக்க வேண்டும். மாலை அல்லது பூச்சரத்தை கழுத்தில் அணிவித்து உதிரிப்பூக்கள் துõவி, ஓம் கோமாத்ரே நமஹ ஓம் ஸுரபி தேவ்யை நமஹ ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ ஓம் காம தேனவே நமஹ ஓம் ஸர்வதேவதா ரூபின்யை நமஹ என்ற மந்திரம் சொல்லி, அர்ச்சனை செய்து, அதனுடன் நிற்கும் கன்றை ஓம் நந்தின்யை நமஹ என்று சொல்லி வணங்க வேண்டும். வாழைப்பழம், புல், அகத்திக்கீரை ஆகியவற்றைக் கொடுத்து கற்பூரம் காட்டி வழிபட்டு மீண்டும் கையில் புஷ்பம் எடுத்துக் கொண்டு பசுவையும் கன்றையும் சேர்த்து மூன்று முறை வலம் வந்து பின்புறம் பூ போட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். இதனை தினமும் செய்யலாம். முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளியில் செய்தால் இல்லம் சுபிட்சமாக இருக்கும். செல்வவளம் பெருகும்.