புவனகிரி கோவிலில் ராகவேந்திரர் சுவாமி அவதார தினம்!
ADDED :3696 days ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் அவதார தின விழா நடந்தது. புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் 421வது ஆண்டு அவதார தினவிழாவையொட்டி சுவாமிக்கு பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. மலர் மாலைகளால் ராகவேந்திரர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. நிருத்திகா பிருந்தாவனத்தில் ரகோத்தம ஆச்சார், ரமேஷ் ஆச்சார், ராகவேந்திரர் ஆச்சார் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய் தனர். கோவில் நிர்வாகம் சார்பிலும், அய்யப்ப சேவா சங்கம் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ராகவேந்திரர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமநாதன், பேராசிரியர் உதயசூரியன், கதிர்வேல் ஆகியோர் செய்திருந் தனர்.