ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில்... நாளை மகா கும்பாபிஷேக விழா
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம், நாளை நடைபெறுகிறது; இதையொட்டி, நேற்று, இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றன.திருப்பூர் ஸ்ரீவிசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் ற்கொள்ளப்பட்டு, நாளை மகா கும்பாபி ஷேகம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை, 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை துவங்கின; விக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து, மூலிகை பொருட்களை யாக குண்டத்தில் இட்டு, சிவாச்சார்யார்கள் யாகம் நடத்தினர். சுவாமிகள் எழுந்தருளியுள்ள கலசங்களுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. யாக
குண்ட பூஜை முடிந்து, நிறை வேள்வி நடந்தது.ஸ்ரீவிஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன் ஆகியோருக்கு அமைக்கப்பட்ட வேதிகைகள் முன், அலங்கரிக்கப்பட்ட சிலைகள் மைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று மாலை, 5:35 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன. மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான குண்டங்கள் மற்றும் வேதிகைகளில் யாகம் நடைபெற்றது; 120க்கும் மேற்பட்ட சிவாச்சார்யார்கள், 38 யாக குண்டங்களில் அமர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, யாக பூஜைகள் நடத்தினர். ரிக், யஜூர், சாம, அதர்வன வேத பாராயணம் நடந்தது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் அருளிய, 12 திருமுறைகள் ஓதப்பட்டன.இன்று காலை, 8:35 முதல், 11:35 மணி வரை, நான்காம் கால யாக பூஜை; மாலை, 5:05 முதல், 8:35 மணி வரை, ஐந்தாம் கால யாக பூஜை நடைபெறும். நாளை காலை, 6:05க்கு, ஆறாம் கால யாக பூஜை துவங்கி, பிம்ப சுத்தி, நாடி சந்தானம், மகாவேள்வி மற்றும் கலசங்கள் புறப்பாடு நடக்கிறது.நாளை காலை, 9:45 மணிக்கு, ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிசாலாட்சி அம்மன், சுப்ரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்கள் மற்றும் ராஜ கோபுரத்துக்கு, புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 10:05 மணிக்கு, ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிசாலாட்சி அம்மன், சுப்ரமணியர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு, மகா அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, திருவீதி உலா நடக்கிறது.
அன்னதானம் வழங்க ஏற்பாடு: ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக, குஜராத்தி திருமண மண்டபம், கஸ்தூரி ஜின்னிங் பேக்டரி வளாகம், சிவசுப்ரமணியம் செட்டியார் வீதி, கஜலட்சுமி தியேட்டர் வீதி, கந்தசாமி செட்டியார் வீதிகளில் அன்னதான பந்தல் மைக்கப்பட்டுள்ளது.கும்பாபிஷேகம் முடிந்ததும், கோவில் வடபுறம் உள்ள அறிவொளி ரோடு வழியாக குஜராத்தி திருமண மண்டபத்துக்கும், பெருமாள் கோவில் சொர்க்கவாசல் எதிர்புறம், பூ மார்க்கெட் வழியாக, அன்னதானம் நடக்கும் இடத்துக்கு செல்வதற்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று இடங்களில், அன்னதானம் தயாரிக்கும் பணி நடக்கிறது. 30க்கும் மேற்பட்ட இடங்களில், குடிநீர் வைக்கப்படும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியில், ஆயிரம் கரசேவகர்கள் ஈடுபட உள்ளனர். அன்னதான பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது; ஸ்ரீ வாரி டிரஸ்ட் கவுரவ ஆலோசகர் முத்து நடராஜன் தலைமை வகித்தார். தலைவர் பலராமன், செயலாளர் ராமகிருஷ்ணன், உதவி தலைவர் செல்வம், நிர்வாகிகள் சங்குராஜ், சச்சிதானந்தம், இன்ஜினியர் சண்முகராஜ் ள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னதான பணி குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது; கரசேவகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.வாகன "பார்க்கிங் எங்கெங்கே?
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்கள் வசதிக்காக, குடிநீர், கழிப்பிடம், வாகன "பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளன.ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை காணும் வகையில், ராஜகோபுரம் முன்புள்ள ரோடு மற்றும் தெற்கு வாசல் ரோடு முழுவதும், பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கும்பாபிஷேகம் காண ஏதுவாக, மேற்கூரை அமைக்கப்படவில்லை. வரிசை தடுப்பு, "பேரி கார்டு அமைக்கப்பட்டு வருகின்றன. தெற்கு, வடக்கு ரோடுகள், பெரிய கடை வீதி சந்திப்பு, பெருமாள் கோவில் சந்திப்பு பகுதிகளில், பெரிய அளவிலான "எல்.இ.டி., திரையில், யாக சாலை மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். கும்பாபிஷேகம் முடிந்ததும், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க, "ஸ்பிரிங்லர் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கு பின், தெற்கு வாசல் வழியாக, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.இதற்காக, பந்தல் மற்றும் வரிசை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. தரிசனம் முடிந்ததும், ராஜகோபுரம் வழியாக வெளியேறி, வடக்கு ரோடு வழியாக, அன்னதான பந்தலுக்குச் செல்ல வேண்டும்.போலீஸ் கண்காணிப்பு
கும்பாபிஷேகத்தை ஒட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 400 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். நான்கு ரோடுகள், அன்னதான வழித்தடம் மற்றும் கோவில் வளாகத்தில், "சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.வாகன "பார்க்கிங் செய்வதற்கு, நொய்யல் ஆற்றின் இருபுறமும், இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வளம் ரோடு, புதிய நொய்யல் கரை ரோடுகளில், கார்கள் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நந்தவன தோட்டம் மற்றும் டைமன்ட் தியேட்டர் , கே.ஆர்.சி., சிட்டி சென்டர் வளாகங்களும், வாகன "பார்க்கிங் செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அரிசிகடை வீதி, பெருமாள் கோவில் வீதி, பெரிய கடை வீதிகளில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும். இவற்றில் ஒருபுறம் மட்டும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநக ராட்சி சார்பில், குடிநீர், தற்காலிக கழிப்பிடங்கள், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.