உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபூஜை செய்யும் முறை எது?

சிவபூஜை செய்யும் முறை எது?

சிவராத்திரி அன்று விரதம் இருந்து கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு திருநீறு பூசிக் கொண்டு, பி ன்னர் சிவபூஜை தொடங்க வேண்டும். மனத் தூய்மையோடு, சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும். இந்த விரதத்தின் போது ஐந் தெழுத்து மந்திரமான நமசிவாய மந்திரத்தை தான் உச்சிரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை இரவு முழுவதும் பலமுறை கூறினால் மகத்தான பலன்கள்  பெற முடியும். வில்வம், துளசி, அருகு முதலியன பூஜைக்குரிய இலைகள். தாமரை, செண்பகம், நீலோத்பவம், அத்தி முதலிய பூக்கள் பூஜைக்குரிய  பூக்கள். வில்வபழம், மாதுளை, பலாப்பழம் ஆகியவை நிவேதனப் பொருட்களாக வைக்க உகந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !