பகவானின் காளிங்க நர்த்தன தத்துவம் என்ன?
ADDED :3890 days ago
பகவானின் காளிங்க நர்த்தனக் கோலம் ஓங்காரத்தின் வடிவில் இருக்கும். நமது மனமே விஷத்தடாகம் (நச்சுப் பொய்கை) அதில் பஞ்சேந்திரியங்கள் என்ற ஐம்புலன்களே ஐந்து தலை பாம்பாகிய காளிங்கன். நம் மனதில் படமெடுத்தாடும் ஐம்புலன்களாகிய பாம்பை இறைவன் திருவடி அடக்கி ஒடுக்கி நல்வழிப்படுத்துகிறது. இதுவே காளிங்க நர்த்தனம் உணர்த்தும் தத்துவம்.