உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

ஓம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

ஓம் என்ற சொல்லுக்கு விளக்கம் விரிந்துகொண்டே போகும். இங்கு மிகவும் சுருக்கமான பதில் தரப்படுகிறது: அ-உ-ம ஆகிய மூன்று  எழுத்துக்களும், சேர்ந்து ஓம் ஆயிற்று. அ என்ற எழுத்து ரிக்வேதத்திலிருந்தும். உ என்ற எழுத்து யஜுர் வேதத்திலிருந்தும், ம என்ற எழுத்து சாம÷ வதத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும். முற்காலத்தில் வேதம் மூன்று என்ற பொருளில் த்ரயோ வேதா: என்றே சொல்லப்பட்டிருக்கிறது. பி ற்காலத்தில் அதர்வ வேதத்தையும் சேர்த்து வேதம் நான்கு என்று கூறும் வழக்கம் வந்தது. ஓம் என்பது வேதம், வேதத்தின் சாரம். அதில் வேதம்  முழுவதும் அடங்கியிருக்கிறது. பாலிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெய் போல - வேதங்களிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட உண்மையாக,  அதாவது - நான்கு வேதங்களின் சாரமாக ஓம் விளங்குகிறது.

அ என்பது இறைவனையும், உ என்பது ஜீவாத்மாவையும், ம என்பது ஜீவாத்மா என்றென்றும் அடிமைப்பட்டவன், அதாவது இறைவனுக்கு ஜீவன்  என்றென்றும் தொண்டு புரிய வேண்டியவன் என்பதையும் உணர்த்தும். அ-உ-ம ஆகியவை முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை  உணர்த்துகின்றன. அ-உ-ம ஆகியவை முறையே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகியவர்களை உணர்த்துகின்றன என்றும் பவுராணிகர்கள்  கூறுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !