மாரியம்மன் கோவில்கும்பாபிஷேக விழா
ADDED :5160 days ago
நாமக்கல்: நாமக்கல், ஆண்டவர் நகர் மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.நாமக்கல், ஆண்டவர் நகரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 23ம் தேதி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல், கணபதி வழிபாடு, வாஸ்சாந்தி உள்ளிட்ட சிறப்பு, அபிஷேக பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, நேற்று அதிகாலை 4 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜையும், 7.30 மணிக்கு மாரியம்மனுக்கு மஹா கும்பாபிஷேக பூஜையும் நடந்தது. அதையடுத்து, மஹா அபிஷேகம். தசதானம், தசதரிசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையில் ஆண்டவர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.