காலாப்பட்டு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
ADDED :3520 days ago
புதுச்சேரி: காலாப்பட்டு முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். காலாப்பட்டில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேகம், சுவாமி வீதி உலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவ விழா நேற்று காலை 8.௦௦ மணிக்கு துவங்கியது. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, கிரேன், பொக்லைன், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்டவற்றில் தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர். சில பக்தர்கள் அலகு குத்தி கார், டிப்பர் லாரி, வேன் உள்ளிட்டவற்றை இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். செடல் உற்சவத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.