கோபாலன் எங்கே?
ADDED :5240 days ago
ஒரு நாள் யசோதை கவலையுடன் அமர்ந்திருந்தாள். இதைக் கண்ட ராதை அதற்கான காரணத்தை வினவினாள். கோபாலன் எங்கே போய்விட்டான், போனவன் இன்னும் திரும்பவில்லை, அவனைக் காணாமல் கவலையில் இருப்பதாக யசோதை கூறினாள். அதற்கு ராதை, தாயே ! ஏன் கவலைப் படுகிறீர் ? கண்ணை மூடிக் கொண்டு கோபாலனைத் தியானித்தால் கோபாலன் வந்து விடுவான் என்றாள். யசோதையும் அப்படியே செய்து கோபாலனுடைய தரிசனம் பெற்றாள். இது உன்னுடைய பக்தியின் பயனாகும். எனக்கும் இந்தச் சக்தியைத் தரமாட்டாயா ? என்று யசோதை ராதையிடம் கேட்டு வரம் பெற்றாள். நாம் அனைவரும் ராதை, யசோதை இவர்களைப் போலவே கோபாலனை எப்போதும் எங்கேயும் காணலாம். ஆனால் ராதையைப் போல் யசோதையைப் போல் கோபாலனை விரும்ப வேண்டும், இதயத்தில் விருப்பம் உதயமாக வேண்டும். விருப்பம் உண்டானால் தரிசனம் தருவான் என்பது கடோபநிஷதம்.