உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடத்துக்குளம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

மடத்துக்குளம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகேயுள்ள கண்ணாடிபுத்துாரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில், 200 ஆண்டுகளை கடந்து பழமையானது.   இந்த கோவிலை புதுப்பிக்கவும், கும்பாபிேஷகம் நடத்தவும் பொதுமக்கள் தீர்மானித்தனர். இதற்கான பணிகள் கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு  முன்பு தொடங்கின. பல்வேறு கட்டுமானப்பணிகள் மற்றும் புதிய சிலைகள் அமைப்பு பணிகளுக்கு பின், கும்பாபிேஷக நிகழ்ச்சிகள், கடந்த 22ம் தேதி காலை, 7:30 மணிக்கு மங்கள வாத்தியம் விநாயகர் பூஜை, கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக நேற்று  காலை, 5:30 மணிக்கு மங்கள வாத்தியம், தீபாராதனையும்,  காலை, 9:30  மணிக்கு மகாகணபதி, பாலசுப்பிரமணியர், மாரியம்மன் கோவிலுக்கு  கும்பாபிேஷகமும் நடந்தது.  மடத்துக்குளம் தாலுகா, வெளியூர் பகுதியிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். காலை, 9:00  மணிமுதல் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !