உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி திரவுபதியம்மன் திருவீதியுலா கோலாகலம்

திருத்தணி திரவுபதியம்மன் திருவீதியுலா கோலாகலம்

திருத்தணி: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா ஒட்டி, பக்தர்கள் உடலில் அலகு குத்தி, டிராக்டரில் உற்சவர் அம்மனை ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.திருத்தணி காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சில பக்தர்கள், உடலில் அலகு குத்தி, டிராக்டரில் இருந்த அம்மனை கயிறு கட்டி இழுத்து வந்தனர்.காந்தி சாலை, பை-பாஸ் சாலை வழியாக காசிநாதரம் கிராமத்திற்கு இழுத்து சென்றனர். பின், கிராம வீதிகளில் உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்தது. அப்போது, பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, காசிநாதபுரம் கிராமவாசிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !