உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

தங்க மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

அவிநாசி: அவிநாசி அருகே செம்பியநல்லுõர் ஊராட்சி, எஸ்.மேட்டுப்பாளையத்தில், தங்க மாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா  நடைபெற்றது. பொங்கல் விழா, 26ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலை  மற்றும் மாலையில் அம்மனுக்கு  அபிஷேகம் மற்றும்  அலங்கார தீபாராதனை நடைபெற்றுது. நேற்று காலை,  பெண்கள் மாவிளக்கு எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து,  அம்மனை வழிபட்டனர். அதன்பின், அம்மனுக்கு மகாபிஷேகம் செய்விக்கப்பட்டு, மலர் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. எஸ்.மேட்டுப்பாளையம், சூளை பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். இன்று,  மஞ்சள் நீர் விழாவுடன் பொ ங்கல் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !