குமாரசாமிபேட்டை மாரியம்மன் கோவில் விழா
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டை மாரியம்மன் கோவில் 79ம் ஆண்டு விழா செப்டம்பர் 6ம் தேதி துவங்கி 10ம் தேதி வரையில் நடக்கிறது. வரும் 6ம் தேதி காலை 10 மணிக்கு முனியப்பன் கோவிலுக்கு அபிஷேகம் செய்தல், மாலை 5 மணிக்கு இடும்பன் ஊர்வலமும், மாலை 6 மணிக்கு காப்பு கட்டி சக்தி கரகம் அழைத்தலும், 7ம் தேதி காலை 8 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், காலை 10 மணிக்கு கூழ் ஊற்றுதல், பகல் 1.30 மணிக்கு செல்லியம்மனுக்கு அபிஷேக ஆராதனை, கூழ் ஊற்றுதலம், மதியம் 3 மணிக்கு விருந்தாடியம்மனுக்கு கூழ் ஊற்றி பொங்கலிடுதலும் நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை 7.30 மணிக்கு தாரை தப்பட்டை சிறப்பு மேளங்களுடன் மாரியம்மன் பூத வாகனத்டல் உடன் வர விருந்தாடியம்மனுக்கு விளக்கெடுத்தலும், மாலை 3 மணிக்கு செல்லியம்மனுக்கு பொங்கலிடுதலும், மாலை 4 மணிக்கு செல்லியம்மனுக்கு விளக்கிடுதலும் நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு மாரியம்மன் கோவிலில் பொங்கலிடுதலும, மாலை 6 மணிக்கு வாண வேடிக்கையுடøன் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் மாவிளக்கெடுத்தலும், 10ம் தேதி அதிகாலை பந்தக்காட்சியும் ஊஞ்சலும் நடக்கிறது. 16ம் தேதி மறு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் செங்குந்த மரபினர் செய்து வருகின்றனர்.