உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் புதிய சப்பரம் வெள்ளோட்டம்!

திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் புதிய சப்பரம் வெள்ளோட்டம்!

காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் புதிதாக ரூ.5 லட்சம் மதிப்பில் இரும்பினால் செய்யப்பட்ட தெருவடைச்சான் சப்பரம் நேற்று வெள்ளோட்டம் நடந்தது.

காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். கோவில் பிரமோற்சவ விழாவில் பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுவது வழக்கம். இதுவரை, சுவாமி வீதியுலாவிற்கு மரத்தினால் செய்யப்பட்ட தெருவடைச்சான் சப்பரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவில் நிர்வாகம் ரூ.5 லட்சம் மதிப்பில் பெல் நிறுவனம் மூலம் புதிதாக 8 சக்கரங்கள் கொண்ட தெருவடைச்சான் சப்பரத்தை செய்துள்ளது. முழுவதும் இரும்பினால் செய்யப்பட்ட இந்த சப்பரம் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி பன்னீசெல்வம், கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை முக்கிய வீதிகள் இழுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !