உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா!

திருத்தணி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா!

திருத்தணி: முத்து மாரியம்மன் கோவிலில், நடந்து வரும் பங்குனி திருவிழாவில், உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  திருத்தணி,  பெரியார் நகர், முத்து மாரியம்மன் கோவிலில்,  8ம் ஆண்டு பங்குனி திருவிழா, கடந்த மாதம், 30ம் தேதி,  கொடியேற்றத்துடன் துவ ங்கியது. தினமும், மூலவருக்கு  சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. ஏழாம் நாளான நேற்று, உற்சவர் அம்மன்  சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு, சாந்தி அபிஷேகம்,  தீபாராதனை நடந்தது. இன்று  அதிகாலை சிறப்பு அபிஷேகம், சக்திகரகம்  ஊர்வலம், கூழ்வார்த்தல் மற்றும் பொங்கல்  வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.  தொடர்ந்து, மாலை அக்னி  வசந்த விழா  மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் பங்குனி திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !