உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் விழா: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

கோவில் விழா: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள சின்னாறு கிராமத்தில், சின்ன தொட்டையா, சித்தையா, பெத்தையா ஆகிய தெய்வங்களுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 48 நாட்களுக்கு முன்பு நடந்தது. விழாவையொட்டி, சின்னாறு கிராமத்தை சுற்றியுள்ள, 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வந்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. கோவில் காளை முன்னே செல்ல, மா விளக்குடன் பின்தொடர்ந்து சென்ற பெண் பக்தர்கள், கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர். அதைத்தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !