உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீரணிப்பட்டி மகோற்சவம் நாளை துவக்கம்

கீரணிப்பட்டி மகோற்சவம் நாளை துவக்கம்

திருப்புத்தூர்: கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நாளை மகோற்சவம் துவங்குகிறது. இளையாத்தங்குடி கைலாசநாத சுவாமி நித்யகல்யாணி அம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்ட விழா கொண்டாடப்படுகிறது. நாளை மாலை இளையாத்தங்குடியிலிருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலாவாக கீரணிப்பட்டிக்கு எழுந்தருளுகிறார். பின்னர் காப்புக்கட்டி மகோற்சவம் துவங்குகிறது. தொடர்ந்து தினசரி இரவு பல்வேறு வாகனங்களில் அம்பாள் புறப்பாடு நடைபெறும். ஏப்.,18ல் தேரோட்டம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !