உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் நார் மேட் வசதி

ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் நார் மேட் வசதி

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, நரசிம்மர் கோவில் செல்லும் வழியில், 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தேங்காய் நார் மேட் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், நரசிம்மர் கோவில் உள்ளது. ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நரசிம்மர் கோவிலுக்கும் சென்று சுவாமியை வழிபடுகின்றனர். அவ்வாறு செல்வதற்காக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதில், செல்லும்போது, வெயிலில் கால்கள் சுடுவதால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் நிதி வசூல் செய்து, 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தேங்காய் நார் மேட் அமைத்துள்ளனர். இது, பக்தர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !