மாரியம்மன் கோவில் மஞ்சள்நீர் திருவிழா
ADDED :3485 days ago
மல்லசமுத்திரம்: வையப்பமலை அருகே, அழகுமுத்து மாரியம்மன், மதுரை வீரன் கோவில் திருவிழா நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, வையப்பமலை அடுத்த கருங்கல்பட்டி அண்ணாநகரில் அழகுமுத்து மாரியம்மன், மதுரை வீரன் கோவில் திருவிழா கடந்த, 4ம் தேதி, கும்பம் வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 6ம்தேதி முத்தெடுத்தல் விழாவும், 8ம் தேதி பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், அக்னி, அலகு குத்துதல் நிகழ்ச்சியும், வீடுகளில் தயாரிக்கப்பட்ட மாவிளக்குகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். நேற்று காலை, 8 மணியளவில், கோவில் கிணற்றில் கும்பம் விடப்பட்டது. தொடர்ந்து, நிறைவு விழாவான மஞ்சள்நீர் விழா கொண்டாடப்பட்டது.