வேம்பத்துாரில் சங்கர ஜெயந்தி விழா
ADDED :3479 days ago
மதுரை: சிவகங்கை மாவட்டம் வேம்பத்துாரில் சங்கர சமாஜம் சார்பில், நுாறாவது ஆண்டு சங்கர ஜெயந்தி மகோற்சவம் மே ௭ முதல் ௧௧ வரை நடக்கிறது. தினமும் காலை ௭.௩௦ மணிக்கு உஞ்சுவர்த்தி, ௯.௩௦க்கு சிறப்பு சொற்பொழிவு, ௧௧.௦௦க்கு ஜகத்குரு ஆராதனை, மாலை ௬.௦௦க்கு ஜகத்குரு ஆராதனை, இரவு ௯.௦௦ மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. துவக்க விழாவிற்கு மகாதேவ அய்யர் தலைமை வகிக்கிறார். ஒருங்கிணைப்பாளர் ரமண ஸ்வரூபானந்தஜி துவக்கி வைக்கிறார். மாலை கணேசன் வாய்ப்பாட்டு இடம்பெறும். மே ௮ மதுரை சத்குரு சங்கீத வித்யாலய மாணவியரின் ஷண்மத ஸ்தாபனாச்சாரியர் நாடகம் நடக்கிறது. மே ௧௦ல் இளம்பிறை மணிமாறன் சொற்பொழிவு, தியாகராஜன் குழுவினர் ஹரிநாம சங்கீர்த்தனம்; மே ௧௧ல் சங்கர விஜயம், ரமண ஸ்வரூபானந்தஜி சொற்பொழிவு, புஷ்ப பல்லக்குடன் விழா நிறைவடையும்.