வாடிப்பட்டி வீரிய காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3498 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே எஸ்.பெருமாள்பட்டியில் வீரிய காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
முன்னதாக கணபதி, சுதர்சன, நவசக்தி, நவக்கிரக ஹோமங்கள் நடந்தன. கோ, கண பூஜை முடிந்து, யாகசாலை பூஜைகள் மற்றும் வேதிகா அர்ச்சனை, அக்னி காரியம் முடிந்து, புனித நீர் கலயம் புறப்பாடு நடந்தது. காலை 9.40 மணிக்கு சிவாச்சாரியார்களால் கோயில் கோபுர கலத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடந்தன. மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயில் பரமேஸ்வர பட்டர் இதை நடத்தினார். பெட்கிராட் நிறுவனர் சுப்புராம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.