உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவளம்பாடி கோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்

காவளம்பாடி கோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் திருநாங்கூர் திவ்ய தேசங்களில், ஒன்றானதும், 108 வைணவ திவ்ய தேசங்களில், 27வது திவ்யதேசமாக வணங்கப்படுவது காவளம்பாடி ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோயில்.

கிருஷ்ணபரமாத்மாவின் மனைவி சத்யபாமா விருப்பத்தின்படி, பாரிஜாத மலரை கிருஷ்ணன், இங்குள்ள தோட்டத்தில் பயிரிட்டதாக தலவரலாறு கூறுகின்றது. இந்த தோட்டம், கிருஷ்ணனால் அமைக்கப்பட்டதாகவும், 25 விதமான செடி, கொடி, மரங்கள் அமைந்திருந்ததாகவும், திருமங்கைஆழ்வார் பாடலில் பாசுரம் பாடியுள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயிலில், பாசுரத்தில் உள்ள மரங்கள், செடிகள், கொடிகள் நடப்பட்டு, நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபாலகிருஷ்ணன், பாமா ருக்மனியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தாரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !