உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பெரியகோவில் தேரில் பந்தகால் நடும் விழா

தஞ்சாவூர் பெரியகோவில் தேரில் பந்தகால் நடும் விழா

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு, தேர்
அலங்கரிப்பதற்காக பந்தகால் நடும் விழா நேற்று நடந்தது.உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய
கோவில் சித்திரை பெருவிழா, கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

தினந்தோறும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
இவ்வாறு நடந்து வரும் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும், 18ம்
தேதி நடக்கிறது. தேரோட்ட விழாவை முன்னிட்டு, தஞ்சை மேல வீதியில் உள்ள தேர்
மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர் அலங்கரிக்கும் பணிகள் துவங்கவுள்ளன.
இதற்காக, தேரில் பந்தகால் நடும் விழா, நேற்று காலை, 9:30 மணிக்கு துவங்கியது. முன்னதாக
மஞ்சள், திரவிய பொடி ஆகியவற்றால் பந்தகால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்,
சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்து தேரில் பந்தகால் நட்டனர். இதைத் தொடர்ந்து, தீபாராதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !