வாடிப்பட்டி கச்சைகட்டியில் கும்பாபிஷேகம்
ADDED :3549 days ago
வாடிப்பட்டி:வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி உச்சினி மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை 9.00 மணிக்கு புனித நீர் கடம் புறப்பாடானது. பின் காலை 10.02 மணிக்கு கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.ஸ்ரீரங்கம் வரதராஜ குருக்கள் தலைமையில் வேதவிற்பனர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின் உச்சினிமாகாளியம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.