இரண்டு விரல் காட்டும் பெருமாள்!
ADDED :3863 days ago
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில், பெருமாள் இரண்டு விரல்களைக் காட்டியபடி காட்சி தருகிறார். ஏன் தெரியுமா? மகாபலியே, நான் இரண்டடி நிலம் அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது? எனக் கேட்கிறார் பெருமாள். இதுபோன்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் பெருமாள் திருக் கோலத்தை வேறெங்கும் காண்பது அரிது!