உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்முகி ஆண்டு பிறப்பு கோவில்களில் வழிபாடு

துர்முகி ஆண்டு பிறப்பு கோவில்களில் வழிபாடு

உடுமலை : சித்திரைக்கனியையொட்டி உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிேஷக,ஆரதனைகள் நடைபெற்றது. குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டையொட்டி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். எஸ்.வி.புரம் ரேணுகாதேவி கோவில் சார்பாக, நாராயண்யம் மற்றும் பக்தி பாடல்கள் படிக்கப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடைபெற்றது. விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்திலும், சாய்பாபா மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாய்பாபா கோவிலில் காலை, 10 மணிக்கு, சாய் சத்சரிதம் பாராயணம், விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணமும் படிக்கப்பட்டது. மதியம் சிறப்பு ஆரத்தி பூஜையும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சாய் பஜன் இன்னிசை நிகழ்ச்சியும், இரவு, 8:30 மணிக்கு, இரவு ஆரத்தி மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !