உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிசாமியாக வலம் வந்த சிறுமி

கன்னிசாமியாக வலம் வந்த சிறுமி

கோபி: கோபி மேட்டுவலவு வள்ளியம்மன் கோவில் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி மேட்டுவலவு, வீராசாமி வீதி, சுப்பண்ணன் வீதி, பாரியூர் ரோடு பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். மஞ்சள் புடவை உடுத்திய சிறுமி, கன்னிசாமியாக ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். கன்னிசாமியை பெண் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி, கற்பூரம் ஏற்றி வணங்கினர். இதை தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !