உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கொடியேற்று விழா

உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கொடியேற்று விழா

திருப்பூர் : பெருமாநல்லூரில் பழமை வாய்ந்த கோ வர்த்தனாம்பிகை உடனமர் ஸ்ரீஉத்தமலிங்கேஸ்வரர் கோவில், சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா, 21ல் நடக்கிறது; கொடியேற்று விழா நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்தது. நாகராஜ் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் ஓத, கொடியேற்று விழா நடத்தப்பட்டது. காளிபாளையம் கிராம மக்கள் பங்கேற்றனர். இரவு 8:00 மணிக்கு, மண்டப கட்டளை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !