போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா
ADDED :3822 days ago
போடி: போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிவன், லட்சுமிநாராயணன், முருகன் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் அலங்காரம் நடந்தது. தக்கார் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் முன்னிலை வகித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.