வெள்ளலூர் தேனீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்!
கோயம்புத்தூர்: வெள்ளலூர் தேனீஸ்வரசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி, திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10.15 மணிக்குள் சிறப்பாக நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
22.4.2016 (வெள்ளிக்கிழமை): காலை: 8.00 மணிக்கு- அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை, கோ பூஜை நடைபெறும்.
மாலை: 5.00 மணிக்கு- வாஸ்து சாந்தி மிருத்சங்கிரணம், அங்குரார்பணம், ஆச்சார்ய வர்ணம்.
23.4.2016 (சனிக்கிழமை)
காலை: 8.00 மணிக்கு- அஸ்திர ஹோமம், பிரசன்னாபிஷேகம், அலங்காரம்
மாலை: 6.00 மணிக்கு- ஆச்சார்ய ரக்ஷாபந்தனம், கலா கர்சனம், கும்ப ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை பூர்ணாகுதி, தீபாராதனை.
24.4.2016 (ஞாயிற்றுக்கிழமை)
காலை: 8.00 மணிக்கு- விசேஷ சந்தி, இரண்டாம் கால யாகபூஜை, பிம்பசுத்தி, விசேஷ திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை.
மாலை: 6.00 மணிக்கு- மூன்றாம்கால யாகபூஜை விசேஷ சந்தி, திரவியாகுதி, பூர்ணாகுதி, வேதபாராயணம், உபசாரம், தீபாராதனை.
25.4.2016 (திங்கட்கிழமை)
காலை: 6.00 மணிக்கு: ரக்ஷாபந்தனம், ஸபர்சாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கிரகப்ரீதி கடம் புறப்பாடு
காலை: 10.00 மணிக்கு- மூலவர் விமானம், மகாகும்பாபிஷேகம்
காலை: 10.15 மணிக்கு- தேனீஸ்வரர் மகாகும்பாபிஷேகம்
காலை: 10.30 மணிக்கு- மகா அபிஷேகம், தீபாராதனை
பகல்: 11.00 மணிக்கு- அன்னதானம்
குறிப்பு: 26.4.2016 செவ்வாய்க்கிழமை முதல் மண்டல பூஜைகள் நடைபெறும்.
மஹா கும்பாபிஷேக ஸர்வஸாதகம்
சிவாகம செல்வர் சிவ ஸ்ரீ. நடராஜ சிவாச்சார்யார் அவர்கள்
டி.ஆர். பட்டிணம், காரைக்கால்
சிவ ஸ்ரீ.இராமநாத குருக்கள் அவர்கள், பரம்பரை ஸ்தானீக டிரஸ்டி,
அ/மி. ஸ்ரீதேனீஸ்வரர் திருக்கோவில், வெள்ளலூர்.
சிறப்பு அழைப்பாளர்கள்: டாக்டர்.கே. பிச்சை சிவாச்சார்யார், கே.எஸ். பாலசுப்ரமண்ய சிவாச்சார்யார், கே. ராஜாபட்டர், ஸ்ரீஸ்ரீ.இராஜ. சரவணமாணிக்கவாசக சுவாமி, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ஸ்ரீஸ்ரீகுருகுள், ஸ்ரீஏ.எஸ். சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார்.