உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் சித்திரை திருவிழா: அலகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள்

காமாட்சியம்மன் சித்திரை திருவிழா: அலகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு முத்துப்பிள்ளையார் கோவிலில் இருந்து படைக்கலத்துடன் தீர்த்தகுடம் எடுத்து அம்மை அழைத்து வரப்பட்டது. நேற்று காலை, காமாட்சியம்மன் - ஏகம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் பக்தர்கள், அலகு குத்தி தேர் இழுத்தனர். இரவு, காமாட்சியம்மன் உற்சவர் திருவீதி உலா நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை மறுநாள், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !