உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா

கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம், கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. அதில், காலை, 7 மணிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அக்னி கரகம் எடுத்தல், தீர்த்தகுடம் எடுத்தல், முளைப்பாரியை எடுத்து கோவிலை வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 4 மணிக்கு மேல், பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து வான வேடிக்கை, குறவன் - குறத்தி ஆட்டம் போன்றவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !