லட்சுமி வராகர் கோயிலில் மே 4 ல் வராக ஜெயந்தி விழா
ADDED :3564 days ago
மதுரை: மதுரை அயிலாங்குடி ஏ.பி.டவுன்ஷிப் வராகர்நகர் லட்சுமி வராகர் கோயிலில் வராக ஜெயந்தி விழா மே 4ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9.30 மணிக்கு பெருமாளுக்கு சங்கல்ப புண்யாக வாசனம், கும்ப ஸ்தாபனம், வேத திவ்ய பிரபந்த பாராயணம், திருமஞ்சனம், அலங்காரம் நடக்கிறது. மதியம் 12.00 மணிக்கு சின்மயா மிஷன் சிவயோகானந்தா ஆசியுரையும், மதியம் 1.00 மணிக்கு சாற்று முறை, தீர்த்தகோஷ்டி, பிரசாதமும் வழங்கப்படும். தொடர்புக்கு: 91760 30996.