ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா
ADDED :3441 days ago
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு கனகதாரா ஸ்தோத்திரம் பாடப்பட்டது. உற்சவர் கல்யாண ஜெகநாதப்பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடந்தது. ராமானுஜரின் அவதார தினத்தை முன்னிட்டு உற்சவர் ராமானுஜர், பெருமாள் கோயிலுக்கு மங்களாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரமாவது பிறந்தநாளை முன்னிட்டு திருமஞ்சனம் நடந்தது. பக்தர்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், பாராயணம், பஜனை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம், சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.