பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :3435 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாளில் திருமஞ்சனக்குடம் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. இரண்டாம் நாளில் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடுகள் செய்தனர். பக்தர்கள் அக்கினிச்சட்டி, பால்குடம், காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்றாம் நாளில் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.