கண்ணுடைய நாயகி கோயில் திருவிழா
ADDED :3434 days ago
சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்றிரவு அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு காப்புக்கட்டுதல், இரவு வெள்ளிகேடயம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளுகிறார். மே 19 காலை பல்லக்கு நிகழ்ச்சி, இரவு உள்வீதியில் தங்கரத புறப்பாடு,வெளிவீதியில் அன்ன வாகன புறப்பாடு நடக்கிறது. மே 20 காலை 8:35 மணிக்கு களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மே 21 காலை 8:10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.