வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் 20ம் தேதி தேர் திருவிழா
ADDED :3432 days ago
வில்லியனுார்: வில்லியனுார் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா 20ம் தேதி நடைபெறுகிறது. வில்லியனுார் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்று வரும் விழாவில் காலையில் சிறப்பு அபிஷேகமும், இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும் 19ம் தேதி திருக்கல்யாணமும். 20ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. 21ம் தேதி தெப்பல் உற்சவமும், 22ம் தேதி முத்துப்பல்லக்கு உற்சவமும், 23ம் தேதி விடையாற்றி உற்சவமும், 24ம் தேதி சன்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் தங்கமணி மற்றும் சிவாச்சாரியார்கள், சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.