குளித்தலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :3431 days ago
குளித்தலை: மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை மகாமாரிம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று தேர் வடம்பிடித்தல் நடந்தது. தேர், நகராட்சி அலுவலகம், கடைவீதி, பஜனை மடம், அக்ரஹாரம், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வழியாக சென்று, மதியம், 3 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குளித்தலை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.