வண்ணாமடை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3432 days ago
பொள்ளாச்சி: கேரள மாநிலம், சித்துார் - வண்ணாமடை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையுடன் நேற்று நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம்கால யாகபூஜையும் தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கலசங்கள் மூலஸ்தானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன. காலை, 9:00 மணியில் இருந்து 10:30 மணிக்குள் பத்ரகாளியம்மன், கருப்பசாமி, நவக்கிரக பரிவாரமூர்த்திகளுக்கும். மூன்றாம்நிலை, நான்காம் நிலை ராஜகோபுரத்துக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பேரூராதீனம், கவுமாரமடாலய குமரகுருபர அடிகள், மருதாசலஅடிகள் மற்றும் சித்துார் ஸ்ரீசிதம்பரசிவாச்சாரியார் முன்னிலையில் மகாகும்பாபிஷேகம் நடந்தது.