உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர்பாபா கோவிலில் கும்பாபிேஷகம்

சித்தர்பாபா கோவிலில் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்துார் சித்தர்பாபா இயற்கை மருத்துவமனை வளாகத்தில், ஆரோக்கியம் தரும் சித்தர் பாபா கோவில் கும்பாபிேஷக விழா நாளை நடக்கிறது. இவ்விழா நேற்று காலை, 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, முதற்கால யாகசாலை பூஜைகள், இரவு 8:30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும் நடந்தது. நாளை (20ம் தேதி) காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாக சாலை பூஜைகள், காலை, 6:10 மணிக்கு நாடி சந்தானம், காலை, 6:30 மணிக்கு மகா பூர்ணாகுதி, காலை, 6:45 மணிக்கு யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு, காலை, 7:05 மணிக்கு விமான கும்பாபிேஷகம், காலை, 7:20 மணிக்கு மூலவர் மகா கும்பாபிேஷகம், மகா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர் முருகையன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !