வல்லத்தில் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3432 days ago
செஞ்சி: வல்லம் ஆனந்த வல்லி அம்மை உடனுறை மகாலிங்கேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா, வல்லம் வேகப்பிள்ளை ஏரிக்கரையில் உள்ள பல நுாறு ஆண்டு கால ஆனந்த வல்லி அம்மை உடனுறை மகாலிங்கேஸ்வரர் கோவில் திருப்பணிகள் செய்து, மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதை முன்னிட்டு கோபூஜை மற்றும் கணபதி வேள்வியும், நிலபதி வேள்வி, மண்ணெடுத்து பூசித்தல், தெய்வ சிலைகள் கரிக்கோலம் வருதல், காப்பு அணிவித்தலும் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கோபூஜையும், 7 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 9.30 மணிக்கு வேள்வி நிறைவும், 10 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும், 10 .30 மணிக்கு திருக்குட நன்னீராட்டும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொது மக்கள் செய்துள்ளனர்.