சித்திரக்கட்டி கோவிலில் எல்லம்மன் ஜாத்திரை விழா!
ADDED :3427 days ago
ஆர்.கே.பேட்டை: பலிஜி மதுராபுரம் சித்தரக்கட்டி எல்லம்மன் மற்றும் கிருஷ்ணர் கோவில்களில் நடந்து வந்த கோடைதிருவிழா, நேற்று, சிறப்பு அபிஷேகத்துடன் நிறைவு பெற்றது. ஆர்.கே.பேட்டை அடுத்த, பலிஜி மதுராபுரம் கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை சித்திரக்கட்டி எல்லம்மன் கோவில் மற்றும் கிருஷ்ணர் கோவிலில் கோடை திருவிழா துவங்கியது. வெள்ளிக்கிழமை சித்திரக்கட்டி எல்லம்மன் கோவிலில் திரளான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். சனிக்கிழமை கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு உற்சவம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு கிருஷ்ணமூர்த்தி, ஊர்வலமாக வீதியுலா எழுந்தருளினார். திருவிழாவின் இறுதி நாளான, நேற்று காலை, கிருஷ்ணர் மற்றும் சித்திரக்கட்டி எல்லம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.