உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா

காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா

மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவில் ஏராளமானோர், தேரை வடம் பிடித்து இழுத்து ÷ நர்த்திக்கடன் செலுத்தினர்.  மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா கடந்த 14ம் தேதி காப்புக்  கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை, தினசரி காலை 7:00 மணியளவில் பெருமாளுக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 20ம் தேதி இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம்  நேற்று காலை 6:00 மணியளவில் துவங்கியது.  முக்கிய வீதிகளின் வழியாக வந்த திருத்தேரை, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு தீர்த்தவாரி, இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !