உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் 123வது ஆண்டு ஜெயந்தி விழா

சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் 123வது ஆண்டு ஜெயந்தி விழா

விருத்தாசலம்: காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் 123வது ஜெயந்தி இரண்டாம் நாள் விழாவில், ஏகாதச ருத்திர ேஹாமம் நடந்தது. காஞ்சி  சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் 123வது ஜெயந்தியொட்டி, விருத்தாசலம் நகர பிராமணர் சங்கம் சார்பில் நான்கு நாள் விழா நடக்கிறது. நேற்று  முன்தினம் மாலை சிறப்பு பூஜைகளுடன் துவங்கி, நேற்று இரண்டாம் நாள் விழா நடந்தது.  அதில், ஏகாதச ருத்திர ேஹாமம், கலச பூஜை செய்யப் பட்டு, அவரது உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிராமணர் சங்க மாவட்டத் தலைவர் அருணாச்சலம், நகர தலைவர் சுந்தரேசன்,  செயலர் சேகர், சந்திரமவுலி, மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். மூன்றாம் நாள் விழாவாக இன்று சிவபார்வதி திருக்கல்யாண உற்சவம் துவ ங்கி, நாளை (22ம் தேதி) காலை 10:30க்கு மேல் பகல் 12:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !